ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்

Webdunia| Last Modified சனி, 21 பிப்ரவரி 2009 (12:01 IST)
20 முதல் 45 வயதுடையவர்கள் ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்ற விருப்பப்பட்டால் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படை தலைமையிட உதவி ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,சென்னை நகர ஊர்க்காவல் படையில், ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். நன்னடத்தை உடையவராகவும், உடல் தகுதி உள்ளவராகவும் சென்னையில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். குடும்ப அட்டை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 30 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர் அருகில் உள்ள காவல்நிலையங்களில் உதவியாக பணிபுரிய அனுப்பப்படுவார்கள்.

சீருடை, தொப்பி, காலனி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மாதம் ரூ.1,320 படி வழங்கப்படும்.

காவல்துறை வேலைக்கு பணி நியமனம் செய்யும்போது, முன்னுரிமை வழங்கப்படும்.
காவல் துறை ஆணையர் அலுவலகம்,
ஊர்க்காவல் படை தலைமையிடம்,
எப்.2 சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம்,
சென்னை-2 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் வாங்கி, பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும் அதே முகவரிக்கே அனுப்ப வேண்டும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :