ஊட்டியில் வேலைவாய்ப்புக் கண்காட்சி!

Webdunia| Last Modified புதன், 1 அக்டோபர் 2008 (11:52 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் வரும் 11 ஆம் தேதி ஊட்டியில் திமுக சார்பில் வேலைவாய்ப்புக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கதர்வாரிய துறை அமைச்சரும், நீலகிரி மாவட்ட திமுக செயலாளருமான கா.ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை: முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆகியவற்றை ஒட்டி இந்த வேலைவாப்புக் கண்காட்சியை திமுக நடத்துகிறது.

வரும் 11 ஆம் தேதி ஊட்டி சாந்தி விஜயா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
சேலம், கோவை, சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தில் வேலைக்கு ஆளெடுக்க உள்ளன.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 2, 3 ஆம் தேதிகளில் ஊட்டி எஸ்.ஆர்.வி.எஸ். பள்ளியில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :