இளைஞர்களுக்கு விமானப் படையில் வாய்ப்பு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
இந்திய விமானப்படையில் ஏர்-மென் (குரூப் ஒய் டிரேட்) பணியிடங்களுக்கு திருமணமாக இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்: பொதுத் தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 01.01.1989 முதல் 28.02.1993க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். குறைந்தது 152.5 செ.மீட்டர் உயரமும் அதற்குரிய எடையுடன், 5 செ.மீட்டர் விரிவடையக் கூடிய மார்பும் பெற்றிருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வை அவசியம்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 20 ஆண்டுகள் அல்லது 57 வயது வரை விமானப் படையில் பணியாற்றலாம். துவக்கத்தில் கர்நாடகாவின் பெல்காம் பகுதியில் 12 வாரப் பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் சிறப்பு பயிற்சி தரப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணிவாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.5,700 உதவித் தொகையாக அளிக்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் இப்பணிக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் ஆங்கிலம், பகுத்தறியும் திறன், பொது அறிவு ஆகியவை எழுத்துத் தேர்வில் கேட்கப்படும். விடைகளைத் தேர்வு செய்யும் முறையில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு 45 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும்.
உடற்தகுதித் தேர்வு: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் உடல் தகுதித் தேர்வில் 8 நிமிடத்தில் 1.6 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும். இந்த தூரத்தை 7.5 நிமிடத்தில் கடப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் தரப்படும்.

மேற்கூறிய 2 தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தபடும். இறுதியாக மருத்துவத் தேர்வும் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி: மே 23-29ஆம் தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இதற்கான விண்ணப்பங்கள் முழு விவரத்துடன் இடம்பெற்றுள்ளது. வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை PRESIDENT, CENTRAL AIR MEN SELECTION BOARD, POST BOX NO-11807, NEW DELHI-110010 என்று முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு மையங்கள்: அம்பாலா, புதுடெல்லி, பாரக்பூர், கான்பூர், பெங்களூரு, மும்பை, சென்னை, புவனேஸ்வர், ஜோத்பூர், குவாஹட்டி, செகந்திராபாத், கொச்சி, போபால் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :