இந்திய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு: ஆய்வு

Webdunia| Last Modified வெள்ளி, 17 செப்டம்பர் 2010 (13:27 IST)
இந்தியாவின் தொழி்ல் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளதால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3,20,000 பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக மா ஃபோய் ரான்ஸ்டாட் நடத்திய வேலை வாய்ப்பு நிலை ஆய்வு கூறுகிறது.

சென்னை, மும்பை உட்பட இந்தியாவின் 8 நகரங்களில், 13 வெவ்வேறு தொழில் துறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் சுகாதாரம், மருத்துவம், வீட்டு மனை, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், த.தொ.சேவைகள், கல்வி, பயிற்சி, ஆலோசனை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை 4,18,564 வேலை இடங்கள் நிறுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் சுகாதாரத் துறையில்தான் மிக அதிகபட்சமாக 1,21,000 பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :