ஆதிதிராவிடர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி!

Webdunia|
தமிழக அரசின் 'தாட்கோ' சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்தவ மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் வரும் 12-ஆம் தேதிக்குள் 'தாட்கோ (Thadco), மாவட்ட மேலாளர் அலுவலகம், சிங்காரவேலன் மாளிகை, சென்னை' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் குழாய் பொருத்துபவர் (Fitter), உணவு தயாரித்து பரிமாறுதல், உதவி செவிலியர் பயிற்சி, டீசல் மெக்கானிக் பயிற்சி போன்றவை உதவித் தொகையுடன் அளிக்கப்படவிருக்கிறது.
பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிட பழங்குடியினர், மதம் மாறிய கிறித்தவ மாணவ- மாணவிகள் 10- ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 15 முதல் 35 வயதுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :