ஆகஸ்ட் 28இல் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு முகாம்

webdunia photo
WD
தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் சிதம்பரநாதன் தலைமையில் காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் துவக்க விழா மற்றும் அறக்கட்டளையின் புதிய இணைய தளம் துவக்கவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை துவக்கிவைத்து வாழ்த்துரை வழங்குகிறார்.

தமிழக தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், திருமலை ஜெயின் மடத்தை சேர்நத ஸ்ரீ தவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் மீனாட்சி ராஜகோபால் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்த முகாமின் முடிவில் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் அறக்கட்டளையின் பொருளாளர் டி.எம்.என்.தீபக் நன்றியுரை கூறுகிறார். அதன் பின்னர் மாற்றுத்திறன் படைத்தோருக்காவேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, அட்வான்டேஜ் அட்வர்டைஸ்மெண்ட் இயக்குனர் முத்துக்குமார் உருவாக்கிய, அறக்கட்டளைக்கான புதிய இணையதளமும் துவக்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு 'கலைவிழி' அமைப்பின் துவக்கவிழா நடைபெறுகிறது. திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் கலந்துக்கொண்டு, குத்துவிளக்கேற்றி இந்அமைப்பதுவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின்போது, மாற்றுத் திறன் கலைஞர்களுக்கு சான்றுகள் ௦௦௦வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளின் கலை அரங்கேற்றமும் நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு மேல் மாற்றுத்திறன் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் இந்த முப்பெரும் விழா நிறைவடைகிறது.

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (18:20 IST)
தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் நீட் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் அறக்கட்டளையின் புதிய இணைய தளம் துவக்க விழா, 'கலைவிழி' அமைப்பு துவக்க விழா, மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வரும் 28ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் ப.சிதம்பரநாதன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :