அடுத்த 3 மாதங்களில் வேலை வாய்ப்பு பெருகும்

Webdunia| Last Modified செவ்வாய், 7 செப்டம்பர் 2010 (13:33 IST)
சீனா, தைவான் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்புகள் பல்கிப் பெருகும் நாடாக இந்தியா உள்ளதென்றும் அடுத்த 3 மாதங்களில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் மேன்பவர்ஸ் எம்பிளாய்மெண்ட் அவுட்லுக் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதாலும் (?), உலக சந்தைகளில் ஏற்றங்கள் காணப்படுவதாலும் இந்தியாவில் நான்காவது காலாண்டிற்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக மேன்பவர்ஸ் இந்தியா அமைப்பின் இயக்குனர் சஞ்சய் பண்டிட் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :