அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு ஆளெடுப்பு!

Webdunia|
வேலூர் மாவட்டத்தில், அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களில் 91 அங்கன்வாடி பணியாளர், 132 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம்.

அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 20 வயது முதல் 35 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு வயது 40 ஆக இருக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கட்டாயம் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 20 வயது முதல் 35 வயதுக்குள், அதே ஊரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் எனில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 10 தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களை அணுகி இதுகுறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :