772 வி.ஏ.ஓ.க்களுக்கு பணி நியமன ஆணை

Webdunia| Last Modified வியாழன், 19 பிப்ரவரி 2009 (12:25 IST)
சிறப்பு தேர்வு மூலம் தேர்வு செய்யப் பட்ட 772 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பணி நியமன ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

1980-க்கு முன்னர் கிராம முன் சீப், ஹெட்மேன், கிராம கர்ணம் போன்ற பதவிகளுக்கு கோட்டாட்சியர்களால் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்காக காத்திருந்த நேரத்தில், அந்தப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன.

இவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க 7-9-2008 மற்றும் 5-10-2008 தேதிகளில் 6 மையங்களில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 792 பேர் வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் 772 பேருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நே‌ற்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் ப‌ணி ‌நியமன ஆணைகளை வழங்கினார்.


இதில் மேலும் படிக்கவும் :