2500 இளைஞர்களுக்கு வெல்டிங் பயிற்சி; பெல் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Webdunia|
FILE
2500 இளைஞர்களுக்கு வெல்டிங் குறித்த பயிற்சி அளிக்கும் வகையில் பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவான வெல்டிங் ஆராய்ச்சி பிரிவில் இப்பயிற்சி ஆண்டுதோறும் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறைவான வருவானம் ஈட்டுவோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :