2008-09இல் 18,000 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது: அரசு

Webdunia| Last Modified திங்கள், 20 ஜூலை 2009 (20:28 IST)
நமது நாட்டில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பாக 2008-09ஆம் நிதியாண்டில் மட்டும் 18,230 காப்புரிமைகள் (Patents) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வியென்றிற்கு பதிலளித்து தொழில், வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த 2007-08 நிதியாண்டில் 15,261 காப்புரிமைகளும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 7,539 காப்புரிமைகளும் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

2008-09 நிதியாண்டில் மட்டும் காப்புரிமை கோரி மொத்தம் 36,877 விண்ணப்பங்கள் இந்திய காப்புரிமை அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும், அவற்றில் 18,230 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிந்தியா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :