ஹால்டிக்கெட் வழங்கும் இடங்கள் அறிவிப்பு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:39 IST)
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறையின் சென்னை மண்டல இயக்குனர் சே.மாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உரிய காலத்திற்குள் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு புதன்கிழமை (11ஆம‌் தே‌தி) முதல் 14-ந் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுக்கும் மையங்கள், கல்வி மாவட்டங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து சென்னை கல்வி மாவட்டங்கள் - மதரசா-ஜு-ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்).

செங்கல்பட்டு - செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு

காஞ்சீபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்,

திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.

திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.

இ‌வ்வாறு ‌அ‌ந்த செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.இதில் மேலும் படிக்கவும் :