மாணவர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: யு.எஸ். உறுதி

Webdunia| Last Modified வியாழன், 17 பிப்ரவரி 2011 (14:29 IST)
இந்தியா மாணவர்களை சிக்கலில் வீழ்த்தியுள்ள போலி விசா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே.குரோலி, டிரை-வாலி பல்கலையில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள், வேறு எவரோ செய்து மோசடியில் சிக்கியுள்ளார்கள், அவர்களைக் காப்போம் என்று கூறியுள்ளார்.

“விசா மோடியில் சிக்கிய மாணவர்கள் தொடர்பான பிரச்சனையில் இந்திய அரசுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். இந்திய அரசின் கவலைகளை புரிந்துகொள்கிறோம். இந்த மோசடியில் மாணவர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள், அதற்கு விரைவில் தீர்வு காண்போம். அவர்களின் நிலை தொங்கிக்கொண்டிருப்பதை போன்றுள்ளது, அதற்காக வருந்துகிறோம” என்று கூறியுள்ளார்.
தங்களைப் பொறுத்தவரை விசா மோசடி நடந்துள்ளது என்று ஆழமாக ஐயப்படுவதாகவும், அது அமெரிக்க அரசிற்கு பெரும் கவலையைத் தந்துள்ளதெனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மேலும் 3 இந்திய மாணவர்ளுக்கு பூட்டப்பட்டிருந்த கண்காணிப்பு டிராக்கர் நீக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :