மருத்துவ அலுவலர் காலி பணியிட‌ங்களு‌க்கான கலந்தாய்வு

Webdunia|
மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கல‌ந்தா‌‌ய்வு சென்னையில் ஜனவ‌ரி 29, 30, 31-ந் தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய 15.10.08 முதல் 20.10.08 வரையிலும், 26.11.08 முதல் 28.11.08 வரைலும் 22.12.08 மற்றும் 23.12.08 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று 853 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் (ஜனவரி) 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல்-கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கல‌ந்தா‌ய்‌வி‌ல் ப‌ங்கு பெற வே‌ண்டியவ‌ர்களு‌க்கு அழை‌ப்பு‌க் கடித‌ங்களு‌ம் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :