மனிதநேய மாணவி இந்து அறநிலைய உதவி ஆணையர்

Webdunia| Last Modified செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (15:55 IST)
FILE
மனித நேயர் சைதை சா.துரைசாமி நடத்திவரும் கல்வி அறக்கட்டளையில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற மாணவி மு.ஜோதிலட்சுமி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையருக்கான (Group - 1B Asst. Commissioner for TN Religious and Charitable Endowment Administration Dept.) தேர்வு 30.05.2010இல் நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வு 09.12.2010இல் நடத்தப்பட்டது. இதில் மனித நேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற டி.அனிதா, ஜி.ஜெயப்பிரியா, பி.கே.கவிநிதா, மு.ஜோதிலட்சுமி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் ஜோதிலட்சுமியின் தேர்ச்சியை எதிர்த்து ஒரு மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு, மாணவி ஜோதிலட்சுமியின் தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்று பயிற்சிக்கு செல்லவிருக்கிறார்.

வெற்றி பெற்ற மாணவி ஜோதிலட்சுமி மனிதநேய கல்வியகத்தின் நிறுவனர் சைதை சா.துரைசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இத்தகவலை மையத்தின் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சாம் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :