பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:43 IST)
அ‌ண்ணா ப‌ல்கலை‌யி‌ல் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்புக‌ளி‌‌ல் சேருவத‌‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌கி‌ன்றன. பூ‌ர்‌த்‌தி செ‌ய்து அனு‌ப்புவத‌‌ற்கான கடை‌சி தே‌தி மே மாத‌ம் 31ஆ‌ம் தே‌தி‌யாகு‌ம்.

இது கு‌றி‌த்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகை‌யி‌ல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைந்த 354 பொறியியல் கல்லூரிகளில், பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. மொத்தம் உள்ள கல்லூரிகளில் 333 கல்லூரிகள் சுயநிதி அந்தஸ்து பெற்றவை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 10, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் 11 உள்ளன.
இவற்றில் இந்த ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதில் 85 ஆயிரம் இடங்கள் ஒற்றை சாளர முறையின் கீழும், 50 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். இந்த ஆண்டு புதியதாக 140 பொறியியல் கல்லூரிகள் தொடங்க, ஏஐசிடிஇக்கு விண்ணப்பம் சென்றுள்ளன. அவற்றுக்கு அனுமதி கிடைத்தால் கூடுதலாக 25 ஆயிரம் இடங்களில் சேர்க்கை நடக்கும்.
சென்னை உட்பட 31 மாவட்டங்களில் 58 மையங்களில், காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பம் பெற முடியாது. தவிர 12, 13 மற்றும் 16ம் தேதிகளிலும் விண்ணப்ப வினியோகம் இல்லை. விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. தபாலில் பெற விரும்புவோர் ரூ.200 சேர்த்து அனுப்ப வேண்டும். இணைய தளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன் ரூ.100க்கான டிடி இணைக்க வேண்டும்.
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்போர், சான்றுகளை எடுத்துவர வேண்டும்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையம், குரோம்பேட்டை எம்ஐடி, புரசைவாக்கம் அரசு தொழில்நுட்ப கல்லூரி, பிராட்வே பாரதி பெண்கள் கல்லூரி, ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் விண்ணப்பங்கள் வழங்க, 18 மைய‌ங்க‌ள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக 3 மைய‌ங்க‌ள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :