பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணிக்கு ஜூன் 9இல் கலந்தாய்வு

சென்னை| Webdunia|
தமிழ்நாடு அமைச்சுப் பணியின் கீழுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொகுப்பூதியப் பணியாளர்களுக்கென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-4 பணிக்கான சிறப்புத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வாணையம் ஒதுக்கீடு செய்துள்ள நபர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்நாடு அமைச்சுப் பணியின் கீழ் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் நியமனம் வழங்கும் பொருட்டு 9ஆம் தேதி காலை 10 மணி முதல் வரிசை எண்.1-200 வரையும், பிற்பகல் 2 மணி முதல் வரிசை எண்.201-415 வரையும் புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எண்.2, ரோசரி சர்ச் ரோடு, சாந்தோம், சென்னை-4 என்ற இடத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர்ப்பட்டியல் pallikalvi.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்புக் கடிதம், தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றை கலந்தாய்வின் போது எடுத்து வர வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :