நிலைமை சரியானதும் வேலை வாய்ப்பு முகாம்

Webdunia| Last Modified புதன், 28 ஜனவரி 2009 (14:44 IST)
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு சரியானதும், தனியார் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மன்னர் ஜனவர் கூறுகையில், ஐடி துறையில் தற்போது சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடக்காததால் தனியார் கல்லூரி மாணவர்கள் கவலையில் உள்ளனர்.

ஐடி தொழிலின் சரிவு மே மாதத்திற்குள் சரியாகிவிடும் என்று பல முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதனால் தனியார் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு முகாம் பற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை சரியானதும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வேந்தர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :