நாளை 10‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள்

Webdunia| Last Modified வெள்ளி, 22 மே 2009 (12:16 IST)
த‌மிழக‌த்‌தி‌லந‌ட‌ந்தமுடி‌ந்த 10‌வகு‌ப்பு‌ததே‌ர்வமுடிவுக‌ளநாளவெ‌ளி‌யிட‌ப்பட உ‌ள்ளது. மாணவ‌ர்க‌ளபெ‌ற்ம‌தி‌‌ப்பெ‌ண்களையு‌ம் அ‌ன்றைய ‌தினமே ப‌ள்‌ளிக‌ளி‌ல் அ‌றி‌ந்து கொ‌ள்ளவு‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், இணையதளங்கள், செல்போன் எண்கள், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

10‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுகளை த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வெ‌ளி‌யிடு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :