த‌மிழக‌த்த‌ி‌ல் வரு‌ம் 22 ஆ‌‌ம் தே‌தி குரூப் 2 தேர்வு

செ‌ன்னை| Webdunia|
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (22ஆ‌ம் தே‌‌தி) நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் உதவி ஆய்வாளர், வருவாய் துறையில் உதவியாளர் உள்ளிட்ட 2,414 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு நாளை மறுநாள் (22ஆ‌ம் தேதி) தமிழகம் முழுவதும் நடக்கிறது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வாணைய அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :