டிச.20இ‌ல் காரை‌க்குடி‌யி‌ல் தே.மு.தி.க வேலை வா‌ய்‌ப்பு முகா‌ம்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:23 IST)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்‌பி‌ல், காரைக்குடியில் வரு‌ம் 20ஆ‌ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறு‌கிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட தே.மு.தி.க கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் விடுத்துள்ள செய்தி‌க்குறிப்பில், "ஈரோடு, கோவை, சென்னை, ஆகிய ஊர்களுக்கு அடுத்த படியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டிச‌‌ம்ப‌ர் 20ஆ‌ம் தேதி காலை 9 மணி முத‌ல் காரைக்குடி விஜயா மஹாலில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் படித்த படிக்காத அனைவரும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை‌ பெற்று பயன் அடையலாம். அதே போல் பல்வேறுவகையான தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு வேலை ஆட்கள் தேவையெனில் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு‌த் தேவையான தகுதி உள்ளவர்களை‌த் தேர்வு செய்துகொள்ளலாம்.
மேலும், வேலை ஆட்கள் தேவைபடுகின்ற உள்ளூர் வெளியூர் நிறுவனங்களும் சிவகங்கை மாவட்ட தே.மு.‌‌தி.க. செயலாளர் திருவேங்கட‌த்தை (தொலை பேசி எண் 9442322672) தொடர்பு கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் பயன் பெற்றுக்கொள்ளலாம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :