டிஎ‌ன்ஓயு பு‌திய துணைவே‌ந்த‌ர்

Webdunia|
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக (டிஎ‌ன்ஓயு) துணைவேந்தராக பேராசிரியை எம்.டி.வி.கல்யாணி ஆ‌னி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றி வந்த எம்.எஸ்.பழனிச்சாமியின் பதவிக்காலம் கட‌ந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடை‌ந்ததை‌த் தொடர்ந்து, புதிய துணைவேந்தராக பேராசிரியை கல்யாணி ஆனி நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியை கல்யாணி 3 ஆண்டு காலம் இந்த பதவியில் இருப்பார் என்று பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான சுர்ஜித் சிங் பர்னாலா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
தற்போது அவர் சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவர் த‌மிழக நிதி அமைச்சர் அன்பழகனின் மருமகள் ஆவார்.


இதில் மேலும் படிக்கவும் :