செ‌வி‌லிய‌ர் க‌ல்‌வி கு‌றி‌த்த இணையதள‌ம்

Webdunia|
போ‌லி செ‌வி‌லிய‌ர் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் மாண‌விக‌‌ள் சே‌ர்வதை தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல், அரசு அங்கீகாரம் பெற்ற தகுதியான கல்வி நிறுவனங்களின் தகவலுடன் கூடிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு‌ள்ளது.

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் (தமிழ்நாடு நர்சிங் மற்றும் மிட்ஒயிப் கவுன்சில் என்ற டி.என்.என்.எம்.சி.) சென்னை சாந்தோமில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், செவிலியர் மற்றும் தாதியர் தொழில் பயிற்சி கல்வி நிறுவனங்கள் வருகின்றன. இதன் பதிவாளராக ஜி.ஜோசபின் ஆர்.லிட்டில் பிளவர் இருக்கிறார்.

தமிழகத்தில் சில நர்சிங் நிறுவனங்கள், அரசு அங்கீகாரத்தை முறையாகப் பெறாமல் மாணவர்களை சேர்த்து விடுகின்றன. படி‌ப்பு மு‌டி‌ந்து டி.எ‌ன்.எ‌ன்.எ‌ம்.‌சி.‌யி‌ல் பதிவு பெறுவதற்கு வரும் போதுதான் அவர்கள் போலி நிறுவனங்க‌ளி‌ல் படி‌த்‌திரு‌ப்பது தெரிய வருகின்றது.
எனவே, இதைத் தடுத்து மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காக புதிய நடைமுறைகளை புகுத்த நர்சிங் கவுன்சில் முடிவு செய்தது.

அதன்படி ட‌பி‌ள்யுட‌பி‌ள்யுட‌பி‌ள்யு.த‌மி‌ழ்நாடுந‌ர்‌சி‌ங்கவு‌ன்‌சி‌ல்.கா‌ம் எ‌ன்ற இணையதள‌‌ம் துவ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது அ‌திகார‌ப்பூ‌ர்வமான இணையதளமாகு‌ம். இந்த இணையதளத்தை, நர்சிங் கவுன்சில் அலுவலகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சிறப்புச் செயலாளர் அபூர்வா நேற்று தொடங்கி வைத்தார்.
நர்சிங் மாணவிகள் யாரும் இனி யாரிடமும் சென்று நர்சிங் கல்வி நிறுவனங்கள் பற்றி தகவல் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக அனைத்து நர்சிங் கல்வி நிறுவனங்களைப் பற்றிய தகவல்களும் அளிக்கப்பட்டு இருக்கும். தேவையான தகவல் விவரங்களை அதற்கான தலைப்புகளுக்குள் சென்று காணலாம்.

நர்சிங் கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கான கல்வி இடங்கள், தங்கிப் படிக்கும் வசதி, ஆசிரியர்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு விவரங்களும் இந்த இணையதளத்தில் தரப்பட்டு இருக்கும். எனவே அங்கீகாரம் பெற்றுள்ள அந்த நிறுவனங்களில் தரத்தை அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் நிறுவனங்களைத் தேர்வு செய்து, மாணவர்கள் அவற்றில் சேர்ந்து படிக்கலாம். ஏதாவது நர்சிங் நிறுவனத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றால், அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.


இதில் மேலும் படிக்கவும் :