சென்னை ராணி மேரி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Webdunia|
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஜூலை 4, 5ஆம் தேதிகளில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டெக்ரூட் (Techruit) என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துள்ளது.

கல்லூரிப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு ITES/BPO, Retail, Banking, Insurance, Finance and Sales/Marketing ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் டெக்ரூட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் இந்நிறுவனம் நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2009ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவ-மாணவியர் கலந்து கொள்ளலாம் என்று டெக்ரூட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன் சிவமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் Perot Systems, Country Club, Azimuth, Sutherland, Serco BPO, Reliance BPO உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அவரக்ளின் கல்வித்தகுதி, திறமைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும், சுமார் 750க்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் சிவமணி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :