சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

Webdunia|
தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்விற்கான உடல் திறன் தேர்வு, நேர்முகத் தேர்விற்கான இலவச பயிற்சி மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தமிழ்நாடு கால்வதுறையின் ஆண்-பெண் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான (1095 பணியிடங்கள்) நேரடி நியமனத் தேர்வு - 2010 குறித்த அறிவிப்பு 01.04.2010 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. இவற்றில் உடல் தகுதித் தேர்வுக்கான உடற்திறன் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றவர்கள் மற்றும் இப்பதவிக்கு தேவையான உடல் அளவு தகுதி பெற்றவர்கள் ஆகியோருக்கு மனிதநேயம் அறக்கட்டளையின் சார்பில் எழுத்து தேர்வுக்கு 640 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், 185 மாணவர்கள் உடல் தகுதிக்கும், நேர்முகத் தேர்விற்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்த கட்டமாக ஆனந்த நடராஜன் (இயக்குனர் இந்திய விளையாட்டு மேம்பாட்டு நிலையம்) அவர்கள் தலைமையில் உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியும் அதன்பின் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியும் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியத்தின் சார்பாக இலவசமாக நடத்தப்படவுள்ளது. இதில் எங்களிடம் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வெற்றியடைந்த 185 மாணவர்கள் தவிர எங்களிடம் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி பெறாத மாணவர்களும் கலந்துகொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சயில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை மனிதநேய அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முகவரி:
சைதை சா. துரைசாமியின்மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம்
எண் 28, பிரதான சாலை, சி.ஐ.டி. நகர்,
சென்னை - 600035
தொலைபேசி: 044 - 24358373, 98401 06162, 96770 28707, 90033 75622
மின் அஞ்சல்: [email protected]
இணையதளம்: www.saidais.com


இதில் மேலும் படிக்கவும் :