சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை| Webdunia| Last Modified சனி, 24 ஏப்ரல் 2010 (12:31 IST)
காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர்களு‌க்கான பதவிக்கு விண்ணப்‌‌பி‌க்கு‌ம் தே‌தி மே 3இ‌ல் இரு‌ந்து 10ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர்களு‌க்கான பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்த மாதம் 1ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3ஆ‌ம் தேதி என்று அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மே 10ஆ‌ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்துசேர வேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :