கல்லூரிகளுக்கு படையெடுக்கின்றன வங்கிகள்

Webdunia|
தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள மூத்த அலுவலர்களில் 80 விழுக்காட்டினர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருப்பதால், புதிய பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் கல்லூரிகளுக்கு படையெடுக்கின்றன.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் 70 களில் மிகப்பெரிய அளவில் வங்கி பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டது.

அவர்களில் 80 விழுக்காடு மூத்த அலுவலர்களும், 50 விழுக்காடு இடைநிலை மேலாளர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர் என இந்தியன் வங்கியின் தலைவரும், மேலாண் இயக்குனருமான டி.எம். பாசின் தெரிவித்தார்.
இதற்காக குறைந்தது 7 லட்சம் பேரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பாசின் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தாண்டு மட்டும் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டும் பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களில் 60 விழுக்காட்டினர் வங்கி பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :