கடல் ஆமைகள் பற்றிய கண்காட்சி

Webdunia| Last Modified வியாழன், 8 ஜனவரி 2009 (12:05 IST)
எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக நூற்றாண்டு கண்காட்சி கூடத்தில் கடல் ஆமைகள் பற்றிய அரிய கண்காட்சி நேற்று துவ‌ங்‌கியது.

இ‌ந்த ஆமைக‌ள் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல், ரசாயனங்களினால் பதப்படுத்தப்பட்ட விதவிதமான கடல் ஆமைகள், அவற்றின் ஓடுகள், கடல் ஆமைகளின் பல்வேறு வகைகளையும், அவற்றின் இனப்பெருக்க முறை, சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துகள் ஆகியவற்றை விவரிக்கும் படங்களும், தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

விலங்கியல் மாணவர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
வருகிற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த அரிய கடல் ஆமை கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பார்க்கலாம்.

தொடக்க விழாவில் பேசிய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீதரன், "கடல் ஆமை முட்டைகளில் விழும் வெப்பநிலைதான் ஆணா? பெண்ணா? என்ற பாலினத்தை தீர்மானிக்கிறது. தற்போது பூமி வெப்பமடைவதால் அதன் தாக்கம் ஆமைகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது'' என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :