ஐ.ஐ.டி.யில் தொழில்நுட்ப பயிற்சி

Webdunia|
FILE
சர்வதேச அளவில் அறியப்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.,யின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் 2013 முதல் 2015 வரையிலான தொழில் நுட்ப பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: எலக்ட்ரானிக்ஸ்

வயது வரம்பு: எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் 23 வயதுக்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 26 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் போன்ற ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.6,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை IIT Madras என்ற பெயரில் வங்கி வரவோலையாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2013

முழுமையான தகவல்கள் அறிய //www.iitm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :