எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை| Webdunia|
எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடியாக தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அதிகபட்சம் 3 பாடங்கள் வரை) மாணவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம் என பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஜூன் 5) நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :