உத‌வி வேளா‌ண் அலுவல‌‌ர் ப‌ணி‌யிட‌ங்க‌ள்

Webdunia| Last Modified வியாழன், 29 ஜனவரி 2009 (12:32 IST)
கா‌லியாக உ‌ள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை ‌நிர‌ப்புவத‌ற்கான நே‌ர்முக‌த் தே‌ர்வுக‌ள் நட‌ந்து வரு‌கிறது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 12-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

தகுதி அடிப்படையில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்கிறவர்கள் யாரும், பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :