இணையத்தில் இடைநிலை ஆசிரியர் விவரம்

Webdunia| Last Modified சனி, 24 ஜனவரி 2009 (11:48 IST)
சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 25.11.2008ஆம் தேதிக்கு முன்பு வரை இடைநிலை ஆசிரியர் கல்வித் தகுதி பெற்று சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் குறித்த விவரங்கள் டபிள்யுடபிள்யுடபிள்யு.சென்னை.டிஎன்.என்ஐசி.இன் என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இருக்கும் விவரங்கள் சரியானவையா என்பதை பதிவு செய்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

விவரங்களில் திருத்தங்கள் இருந்தால், உரிய தகவல்களுடன் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ஜனவரி 30க்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :