இடை‌நிலை ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி : சா‌ன்‌றித‌ழ் ச‌ரிபா‌ர்‌‌ப்பு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:43 IST)
அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் கா‌லியாக உ‌ள்ள 5,773 இடை நிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதைத் தொடர்ந்து 30 ஆயிரம் பே‌ர்க‌ளி‌ன் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 28-ந் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மாநில ப‌திவு மூ‌ப்பு அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு ஒரு பணிக்கு 5 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 27 ஆயிரத்து 912 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
10 ஆயிரம் பேர்களுக்கு அனுப்பியாகிவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பப்பட்டு 28-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளனர். ஜுன் மாதம் 5-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது.
ஒரு பணிக்கு 5 பேர் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்றால் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருக்கலாம். சிலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலைபார்க்கலாம். இத்தகைய காரணங்களால் அவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வராமல் போகலாம். இதன் காரணமாகத்தான் ஒரு பணிக்கு 5 பேர் அழைக்கப்படுகிறார்கள். மேலும் ப‌திவு மூ‌ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் பணி நியமனம் நடைபெறும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி.ஏ.ராமையா, உறுப்பினர் செயலாளர் ஆர்.கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :