இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: ஜூன் 15க்குள் பட்டியல் வெளியீடு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
இடைநிலை ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 1985 முதல் இடைநிலை ஆசிரியர் பணிக்கு பதிவு செய்திருந்தவர்களில் 27,957 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் 5,773 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்ப் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :