இங்கிலாந்து : இந்திய மாணவர்களுக்கு புதிய விசா விதிமுறை

Webdunia| Last Modified புதன், 1 ஏப்ரல் 2009 (12:09 IST)
இங்கிலாந்து நாடு இந்திய மாணவர்களுக்கு புதிய விசா விதிமுறைகளை அறிமுகம் செய்து உள்ளது.

இது கு‌றி‌த்து உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ஜாக்குய் ஸ்மித் பேசுகை‌யி‌ல், புதிய விதிமுறைகள் எளிதாகவும், வெளிப்படையானதாகவும், தவறுகள் நடப்பதை தவிர்க்கும் வகையிலும் இருக்கும்.

இன்று முதல் அனைத்து இங்கிலாந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ூகே பார்டர் ஏஜென்சியிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். விசா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களா என்பதை அந்த கல்வி நிறுவனங்கள் தான் கண்காணிக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மாணவர்கள் விசாவுக்கு மனு செய்வதற்கு முன்பே படிக்கும் நிறுவனத்தின் அனுமதியை பெற்று இருக்க வேண்டும். படிப்பதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான வசதி இருப்பதை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக விசா வழங்கப்படும் எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :