இங்கிலாந்தில் வேலையிழப்பு விகிதம் அதிகரிப்பு

லண்டன்| Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (23:20 IST)
இங்கிலாந்தில் வேலையிழப்பு விகிதம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரியுடன் முடிவடைந்த காலாண்டில் வேலையிழப்பு விகிதம் 6.5% ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 6.3% ஆக இருந்த வேலையிழப்பு விகிதம், தற்போது 6.5% ஆக உயர்ந்துள்ளதால் இங்கிலாந்து முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :