ஆஸ்ட்ரேலியாவில் 30 ஆயிரம் இந்தியர்களுக்கு பணி வாய்ப்பு

Webdunia| Last Modified வியாழன், 5 மே 2011 (11:08 IST)
ஆஸ்ட்ரேலியாவின் சுரங்கம் உள்ளிட்ட திறன் பணியாளர் தேவைப்படும் பணிகளுக்கு 30 ஆயிரம் இந்தியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி கூறியுள்ளார்.

மெல்போர்னில் இருந்து வெளிவரும் பிசினஸ் டெய்லி எனும் நாளிதழிற்கு அளித்த பேட்டியில் இந்தியாவிற்கான ஆஸ்ட்ரேலியாவின் வர்த்தக பிரதிநிதி பீட்டர் லிண்ட்ஃபோர்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலிய தனியார் நிறுவனங்களால் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த 30 ஆயிரம் இந்தியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஆஸ்ட்ரேலியாவில் இப்போது திறன் பணிகளில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதெனவும் கூறப்படுகிறது.
திறன் பணியாளர் பற்றாக்குறையைப் போக்க ஏற்கனவே ஆஸ்ட்ரேலிய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட 20 ஆயிரம் பணியாளர்களால் ஒரு இலட்சம் இந்தியர்கள் பயிற்சியளிக்கப்படுவார்கள் என்றும் ஆஸ்ட்ரேலிய அரசுப் பிரதிநிதி கூறியுள்ளார்.

திறன் பணியாளர்களை உருவாக்க இரண்டு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பயிற்சி அளிப்பதற்கான நிறுவனங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :