அஷ்டலட்சுமி கோயிலில் ஹோம‌ம்

Webdunia| Last Modified புதன், 4 பிப்ரவரி 2009 (11:45 IST)
ெசன்ட் நக‌ரி‌ல் அமை‌ந்து‌ள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் ப‌ள்‌ளி மாணவ‌ர்களு‌க்கான ‌ஸ்ரீ ‌வி‌த்யா ல‌ட்சு‌மி ஹோம‌ம் நடைபெற உ‌ள்ளது.

ப‌ள்‌ளி‌ப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தே‌ர்‌வி‌ல் அ‌திக ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெற வே‌ண்டி நட‌த்த‌ப்படு‌ம் இ‌ந்த ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம் வரும் 7-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

மேலும் தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு ராஜா முத்தையா உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.டி.சிதம்பரம் கருத்துரையு‌ம் வழங்க உ‌ள்ளா‌ர்.
ஹோம‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ள விருப்ப‌ம் உ‌ள்ள மாணவ மாண‌விய‌ர், த‌ங்களது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றைக் கூறி 4-ம் தேதி (புதன்கிழமை) முதல் 6-ம் தேதி வரை மு‌ன் பதிவு செய்துகொள்ளலாம் மேலும் விவரங்க‌ள் அ‌றிய 044-2491 7777 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :