அயல்நாட்டு வேலைவாய்ப்பு ப‌திவு : புதுப்பிக்க சிறப்பு சலுகை

Webdunia| Last Modified சனி, 27 டிசம்பர் 2008 (15:20 IST)
தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாமஎ‌ன்று தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மைச் செயலாளர் குட்சியா காந்தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல், "தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றுகளின் 2 நகல்கள் மற்றும் பதிவு புதுப்பித்தல் கட்டணமாக ரூ.112க்கான வரைவேலையை (டி.ி.) 'OVERSEAS MANPOWER CORPORATION LTD' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து, "அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எ‌ண். 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை- 20" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எ‌ன்று கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :