அமெரிக்கா: ஜூலையில் மட்டும் 97,373 பேர் வேலையிழப்பு

சிகாகோ| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் திட்டமிட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் கீழ் 97,373 பேர் வேலையிழந்துள்ளனர். 2009ன் இறுதிக் காலாண்டில் வேலையிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அந்நாட்டு பிரபல கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சேலஞ்சர் கிரே அண்டு கிறிஸ்துமஸ் கன்சல்டன்ஸி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் திட்டமிட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் கீழ் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

ஆனால் ஜூலை மாதத்தில் இது 97,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரிக்குப் பின்னர் ஒரே மாதத்தில் அதிகளவு பணியாளர்கள் ஜூலையில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்கப் பொருளாதாராம் முற்றிலுமாக மீட்சி பெறுவதற்கான கட்டத்திற்கு வெகு தொலைவில் தற்போது இருக்கிறோம்.
எனவே, நடப்பாண்டின் இறுதிக் காலாண்டில், திட்டமிட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் கீழ் மாதந்தோறும் வேலையிழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :