அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து வழக்கு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:41 IST)
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு தா‌க்‌கீது அனுப்பப்பட்டுள்ளது.

கோவை பொறியியல் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் சுதானந்தன், செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்துள்ள மனு‌வி‌ல், கோவை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளுக்கு முத்திரையிட்ட உறையில் கேள்வித்தாள்களை அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பி வந்தது. மாணவர்களின் விடைத்தாள்களும் முத்திரையிட்ட உறையில் வைத்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப்போது கேள்வித்தாள்கள் ஆன்லைன் மூலமாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றை நகல் எடுத்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்லூரிகள் கொடுத்து வருகின்றன. இதேபோல் விடைத்தாள்களையும் ஆன்லைனில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கும். க‌ணி‌னி மூலமாகவே விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி வந்தனர்.
இந்த ஆன்லைன் பணிகள் யாவும் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. க‌ணி‌னி வசதி இல்லாத கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. க‌ணி‌னி வசதிக்காக கல்லூரிகள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. மேலும் இந்த முறையில் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்மையில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட எம்.பி.ஏ. தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
எனவே, ஆன்லைன் தேர்வு முறைக்கு தடை விதிக்க வேண்டும். பழைய முறையையே பின்பற்ற உத்தரவிட வேண்டும். க‌ணி‌னி வசதி அமைக்காத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுகுணா மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, மனுதாரர் சார்பாக மூத்த வழ‌க்க‌றிஞ‌ர் கே.துரைசாமி ஆஜராகி, ''அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள ஆன்லைன் தேர்வு முறையில் குளறுபடி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும்'' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, ஒரு வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :