நூற்றுக்குக் குறைவான இடங்களே காங்கிரஸுக்கு கிடைக்கும் - அத்வானி கணிப்பு

Webdunia|
FILE
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்பு கவர்னராக இருந்த, மறைந்த கைலாஷ்பதி மிஸ்ராவின் நினைவுநாள் நிகழ்ச்சி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும், கடுமையாக பாடுபட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு 182-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

பல்வேறு ஊழல்கள் மூலம் காங்கிரஸ் தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டதாகவும், அந்த கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தீர்மானித்து விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்


இதில் மேலும் படிக்கவும் :