அரசியலை வியாபாரமாக்கிவிட்டது காங்கிரஸ் - மோடி தாக்கு!

Webdunia|
FILE
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி சுஜன்புர் திராவில் பரிவர்த்தனை பேரணியில் பங்குகொண்டு உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சி அரசியலை வியாபாரமாக்கி விட்டது. அதை அவர்கள் தொழிலாக பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் வழியாக பார்க்கிறோம் என்றார்.

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டதால் ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் இயல்பாகவே அக்கட்சி இழந்துவிட்டது. வேலைவாய்ப்பு தேடி வீடு தோறும் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.
இம்மாநில மக்களின் அன்பை நான் என்றும் மறக்கமாட்டேன். பாசத்தையும், மரியாதையையும் இந்த மாநிலம் எனக்கு தந்துள்ளது. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இங்குள்ள மக்களுக்கு என்னால் இயன்றதை செய்வேன். வரும் பொதுத்தேர்தலின் நோக்கம் மக்களுக்கு தேவையான உணவு, வீடு மற்றும் முதியவர்களுக்கு சுகாதார வசதிகள் ஆகியவற்றை வழங்குவதே என்று அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :