TANCET தேர்வு முடிவு: ஜூன் 20இல் வெளியீடு

சென்னை: | Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
MBA, MCA, M.E மற்றும் M.Tech ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட TANCET தேர்வின் முடிவுகள் வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

MBA, MCA மற்றும் ME ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வாக TANCET நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதன் மூலமே மேற்கூறிய படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தாண்டுக்கான TANCET தேர்வு கடந்த மே 30, 31ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் MBA படிப்புக்கு 54,100 மாணவர்களும், MCA படிப்புக்கு 19,900 மாணவர்களும், M.E மற்றும் M.Tech ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 30,200 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் இதனை annauniv.edu என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :