IT Management பிரிவில் ஒருங்கிணைந்த MBA படிப்பு: IGNOU அறிமுகம்

புதுடெல்லி| Webdunia|
சிங்கப்பூரின் U21Global நிறுவனத்துடன் இணைந்து ஐ.டி. மேனேஜ்மென்ட் பிரிவில் எம்.பி.ஏ. படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU- இன்னோ) அறிமுகப்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கும் இந்த முதுநிலைப் படிப்பில் சேர்பவர்களுக்கு முதற்கட்டமாக U21Global நிறுவனத்தின் சார்பில் ஒரு ஆண்டுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிர்வாகத்தில் எக்ஸிகியூட்டிவ் சான்றிதழ் (Executive Certificate in Global Information Technology Management) வழங்கப்படும்.
இதையடுத்து அடுத்த 6 மாதங்களுக்கு இக்னோ பல்கலை. சார்பில் தொலைதூரக் கல்வி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, IT Management பிரிவில் MBA சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பும், ஐ.டி. துறையில் சூப்பர்வைசர்/ மானேஜர்/தொழில்முறை பிரிவில் 2 ஆண்டு அனுபவமும் உள்ளவர்கள் இந்தப் படிப்புக்கு தகுதியானவர்கள்.
இதேபோல் பட்டப்படிப்பு இல்லாமல் ஐ.டி. துறையில் சூப்பர்வைசர்/ மானேஜர்/தொழில்முறை பிரிவில் 6 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

இப்படிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்களை ignou.ac.in அல்லது u21global.edu.sg/ignouor என்ற இணைய தளத்தில் பெறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :