IGNOU படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

Webdunia| Last Modified திங்கள், 29 ஜூன் 2009 (13:07 IST)
இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம் (IGNOU) நடத்தும் பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், கல்வி கிடைக்கப் பெறாதவர்களுக்கும் இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம் ஒளி விளக்காக இருந்து வருகிறது. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இக்னோ (IGNOU) பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இக்னோ தலைமையகம், மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :