8ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு

Webdunia| Last Modified செவ்வாய், 3 மார்ச் 2009 (12:33 IST)
தனித் தேர்வர்களுக்காக நடந்த 8ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு தேர்வுகள் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பரில் தனித் தேர்வர்களுக்கென நடந்த 8ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அந்தந்த தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

தனித் தேர்வர்கள் அந்தந்த மையங்களுக்கு மதியம் 2 மணிக்கு மேல் சென்று முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் டபிள்யுடபிள்யுடபிள்யு.டிஎன்.ஜிஓவி.இன் மற்றும் டபிள்யுடபிள்யுடபிள்யு.பிஏஎல்எல்ஐகேஏஎல்விஐ.இன் ஆகிய இணையதளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

8ஆம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் மாதம் நடக்க உள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தக்கல் முறையின் கீழ் தேர்வு எழுதலாம்.
விண்ணப்பங்கள் அந்தந்த மண்டல துணைத் தேர்வுகள் இயக்கத்தில் பெறலாம். விண்ணப்பங்களை 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் மாதம் நடக்க உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் ஓஎஸ்எல்சி தேர்வுகளை சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் எழுத விரும்புவோர் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதி திட்ட கட்டணம் ரூ.500, தேர்வுக் கட்டணம் ரூ.125 செலுத்த வேண்டும்ட என்று அரசுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :