5 ஆண்டு சட்டப்படிப்பு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

செ‌ன்னை | Webdunia| Last Modified சனி, 13 ஜூன் 2009 (10:39 IST)
5 ஆ‌ண்டு ‌ி.ஏ.‌ி.எ‌லபடி‌ப்பு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கு‌மதே‌தி வரு‌ம் 25ஆ‌மதே‌தி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல் பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு ஜூன் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வரு‌ம் 15ஆம் தேதி கடைசி என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஜூ‌ன் 25ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :