3ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதியில் மாற்றம்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2009 (11:44 IST)
மருத்துவ படிப்புகளுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 28ஆம் தேதிகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி நேற்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், மதுராந்தகம் அருகே கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னையில் 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் ஏற்கனவே செப்டம்பர் 25ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு 26ஆம் தேதியும், செப்டம்பர் 26ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு 28ஆம் தேதியும் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :