24 முத‌ல் +2 விடைத்தாள் திருத்தும் பணி

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (23:20 IST)
மா‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌தி துவ‌ங்‌கிய ‌பிள‌ஸ் 2 பொது‌த் தே‌ர்வுக‌ள் வரு‌ம் 23ஆ‌ம் தே‌தியுட‌ன் ‌நிறைவடை‌கிறது. தே‌ர்வு முடி‌ந்த மறுநாளே ‌விடை‌த்தா‌ள்க‌ள் ‌திரு‌த்து‌ம் ப‌ணி துவ‌ங்கு‌கிறது.

பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

23-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இந்த நிலையில், தேர்வு முடிந்த மறுநாள், அதாவது 24-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
முதலில் தமிழ் முதல் தாள் விடைத்தாள்கள் திருத்தப்படும். தமிழகம் முழுவதும் 55 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. சென்னையில் 3 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் பணியை நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், விடைத்தாள்கள் பராமரிக்கப்பட்டு வரும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :